மலேசியத் தமிழ் எழுத்துலகம்

முகப்பு PDF அச்சிடுக மின்-அஞ்சல்



சகோதரி கிருஷ்ணா ராஜமோகன் அவர்களின் அரிய முயற்சியால்  உருவாக்கம் பெற்று 15.2.2007 - அன்று செயல்படத் தொடங்கிய  மலேசிய தமிழ் எழுத்துலக இணைய தளம் "  மலேசிய தமிழ் எழுத்தாளர்களை  உலகளாவிய நிலையில் அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.    இவருடன் கைகோர்த்து  இந்த வலைதளம் மென்மேலும் வளர துணை புரிவதிலும் இதனை விரிவுபடுத்தவும்  மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.

உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் ஆர்வலர்கள் நமது படைப்பிலக்கிய வாதிகளை அறிந்து கொள்ளவும் சங்கத்தின்  நடவடிக்கைகளோடு இணைத்து கொண்டு உறவுப் பாலம் அமைக்கவும் இந்த வலைத்தளம் துணை புரியும் என்பது நிச்சயம்.    கடல் கடந்து வாழ்ந்தாலும் நினைத்த மாத்திரத்தில் கலந்துரையாடவும் உறவாடவும் இந்த மின்னாடல் வழிவகுக்கும்.

இது புதிய தொடக்கம். ஆனால், மிகப் பெரிய கனவுகளை பின்னணியாக கொண்ட தொடக்கம்.  தமிழ் ஆர்வலர்கள் உலகத்தில் எத்திக்கில் இருப்பினும், இருந்த இடத்திலிருந்து  மலேசியப் படைப்புகளை இணையம்  வழி சுவாசிக்கும் நிலையை  ஏற்படுத்துவதே சங்கத்தின் தூரநோக்கு திட்டம். 
அந்த இலக்கை அடைய அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்.
அன்புடன்
பெ. இராஜேந்திரன் 
தலைவர் 
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்





தமிழ் மொழியை சுவாசிக்கும் மலேசியப் படைப்பாளர்களே, பன்மொழியும் பல்லின மக்களும் வாழும் மலேசிய நாட்டில்,  தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய பேரருளார்களை இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள இந்த அகப்பக்கம் நீண்ட யாத்திரை மேற்கொண்டுள்ளது.

சுமார் 140-ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ள மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை உலகப்பார்வைக்கு எடுத்துச் செல்வதோடு அதனை வருங்கால தலைமுறையினர்க்கு, காலத்துக்கேற்ற ஊடகங்கள் வழி சேகரித்து வைக்கவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மலேசியத் தமிழ் எழுத்துலக இணைய தளம் இப்போது புதிய வடிவமைப்புடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் இவற்றை முழுமையாகப் பதிவு செய்யும் இணையத்தளமாகப் புத்தாக்கம் செய்யப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இணையத்தளத்தில் மேலும் பல குறிப்புகள் இணைக்கப்படலாம்.
உங்களைப் பற்றிய எழுத்துலக செய்திகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், மறக்கப்பட்ட, வரலாற்று குறிப்புகளும் தேவைப்படுகின்றன. எனவே,  மலேசியத் தமிழ் எழுத்துலகத் தரவுகள் கைவசம் இருந்தால் (ஒரு வரி குறிப்பாக இருப்பினும்) அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்கள் இணையத்தளம். நீங்கள் சுதந்திரமாக இங்கே உலா வரலாம். உங்கள் படைப்புகளைப் பதிவேற்றலாம். குறைகளை நிவர்த்தி செய்யலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்; நிறைகளைப் பாராட்டவும் செய்யலாம்.
தமிழ்ச் சுவை பருகிட, பகிர்ந்திட வாருங்கள்.

தடைகளை உடைத்து தமிழால் இணைவோம்.

உணர்வு-ஆக்கம்:
கிருஷ்ணா' ராஜ் மோகன்


 

மொழி

Type in:

உருவாக்கம்

பதிப்புரிமை
18/10/2006

அறிமுக விழா

15/02/2007

வருகையாளர் கணக்கீடு

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8
mod_vvisit_counterYesterday71
mod_vvisit_counterThis week680
mod_vvisit_counterLast week632
mod_vvisit_counterThis month2117
mod_vvisit_counterLast month2449
mod_vvisit_counterAll days39035

We have: 1 guests online
Your IP: : 38.107.179.231
Today: ஜன 28, 2012

தமிழ் வாழ்த்து

There seems to be an error with the player !

நூலகம்

விளம்பரம்

இங்கு  விளம்பரங்கள் செய்ய வேண்டுமா?
இன்றே தொடர்பு கொள்க

பொன்மொழிகள்

"If Lincoln was alive today, he'd roll over in his grave." -- Gerald Ford