நிகழ்வுகள்
வேர்களை நோக்கி விழுதுகளின் பயணம்
பகுதி 1
மலேசியத்
தமிழ் இலக்கியத்தை தமிழகத்திலும்,
புதுச்சேரியிலும் அறிமுகப் படுத்தும் இலட்சியத்தோடு 34 எழுத்தாளர்கள் 19 நாள்
இலக்கியச் சுற்றுலாவை மேற்கொண்டு வரலாறு படைத்தனர்.
---------------------------------------------------
சிறகடித்துப் பறக்கிறது.....
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. பெ.
ராஜேந்திரன் அவர்களின் எண்ணப்பறவை....
கால்
ஊன்றிய
மலாயா
மண்ணில் தமிழை வேரூன்ற வைத்து
பிழைக்க
வந்த பூமியில் தமிழையும் தழைக்கச் செய்திட்ட மலேசியத் தமிழர்களின் இலக்கியத்தை
அந்த
இலக்கியத்தினூடே இழைந்தோடும் வாழ்க்கையை..
அதனை
வார்த்தெடுத்த இலக்கியவாதிகளை தாய்த் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி,
ஓர்
இலக்கிய பண்டமாற்றம் நிகழ்த்திட வேண்டும் என்கிற நீங்காத நெடுநாளைய வேட்கையில்
விளைந்தது இந்த இலக்கியச் சுற்றுலா.
தமிழ்
நாட்டு படைப்புகளை மலேசியர்கள் அறிந்து வைத்திருப்பது போல
தமிழக
இலக்கியம் மீது மலேசியர்களுக்குள் இருக்கும் தேடலைப்போல..
தமிழக
மக்கள் மத்தியில்..
மலேசியப்படைப்பு - படைப்பாளி மீது
கவன
ஈர்ப்பை உருவாக்குவதை
முதன்மை
நோக்கமாக கொண்டு தொடங்கியது இந்த
வித்தியாசமான பயணம்.
புலம்
பெயர்ந்து வந்து விழுந்த இடத்தில்
விளைவித்த இலக்கிய தானியங்களை சுமந்து கொண்டு இந்த விழுதுகள்
வேர்களை
நோக்கி பயணித்தன.
சென்றோம்
- கண்டோம் - உண்டோம் மகிழ்ந்தோம் - திரும்பினோம்
என்றில்லாமல் எதிர்கால விளைச்சலுக்கு இந்த பயணம் வழி வகுத்து, மலேசியத் தமிழ்
இலக்கியப் பரவலாக்கத்துக்கு வித்திட்டது.
வரலாற்றுச் சுவடுகளை
பாதுகாக்கத் தவறியதால்
புலம்
பெயர்ந்த பல தேசங்களில்
தமிழிலிருந்து அந்தியப்பட்டு
தவிக்கின்றான் தமிழன்
பெரியதாய் நிகழ்ந்த
படையெடுப்புகள் மட்டுமல்ல..
அர்த்தமுள்ள
ஆக்கப்பூர்வமான
சின்ன
சின்ன பயணங்கள் கூட நாளைய தலைமுறைக்கு வரலாறாய் நிலைத்து நின்றிடும்.
வழிகாட்டியாய் ஒளி வீசும்!
28-11-2007- அன்று மலேசியத் தமிழ் இலக்கிய குடும்பம், சென்னை விமான நிலையத்தில்
வந்து சேர்ந்த போது, 'தமிழக அரசு உங்களை வரவேற்கிறது' என்று மலர் மாலை, பூங்கொத்து,
பொன்னாடை, இசை முழக்கம் என வரவேற்புகள் திணற வைத்தன, செய்தி மக்கள்
தொடர்புத் துறை தலைமை இயக்குநர் முனைவர் .சி. மோகன்தாஸ், கவிப்பேரரசு வைரமுத்துவின்
புதல்வன் கபிலன், கவிஞரின் உதவியாளர் பாஸ்கர், பேராயர் ஜேம்ஸ் சந்தோசம் மற்றும்
செய்தியாளர், நண்பர்கள் என சென்னை விமான நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இவை
அனைத்தும்
முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் இலக்கிய
விருந்தினர்கள் என்ற முத்திரைக்கு கிடைத்த அங்கீகாரம்.
எண்ணப்பறவை சிறகடிக்கும்....
----------------------------------------------------------------------
நடந்தவை
தமிழ் கமழ்ந்த 30-ஆம் ஆண்டு திருமுறை விழா
கடந்த வாரம், கோலாலம்பூர், விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் 'மலேசிய இந்து சங்கத்தின்
30-ஆம் ஆண்டு திருமுறை விழாவில், தமிழும் திருமுறையும் இணைந்து மணம் கமழ்ந்த அற்புத
விழாவாக மெய்சிலிர்க்க வைத்தது.
அன்புநெறியையும் அறநெறியையும் சார்ந்த இறைநெறியைப் போற்றும் திருநெறியத் தமிழ்
மொழியை திருஞானசம்பந்தர் ஊர் ஊராக நடைபயின்று 252 தலங்களில் பாடிப்பாடியே வளர்த்தார்.
அத்தையை திருநெறித்தமிழை வளர்க்க மலேசிய இந்து சங்கம் கடந்த 30 வருடங்களாக
தொய்வின்றி அரும்பணி ஆற்றி வருகின்றது என்றும், இத்தகு தெய்வப் பணிகளை சிரமேற்கொண்ட
நம் சமயச் சான்றோர்களையும் ஆன்றோர்களையும் இங்வேளையில் நினைவு கூறுவது நம் கடமை
என்றும் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கந்தசாமி கூறினார்.
மலேசிய இந்து சங்கத்தின் தேசிய விழாக்களுள் தலையாயது திருமுறை விழா. கடந்த 30
ஆண்டுகளில் ஏறக்குறைய ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் திருமுறை ஓதக்
கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய தேசியத் தலைவர்
டத்தோ. அ. வைத்திலிங்கம் கூறினார்.
மலையாளம், தெலுங்கு மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட இந்து பெருமக்கள் இளம் வயதிலேயே
ம.இந்து சங்கத்தின் வழி திருமுறைகளை கற்று, சிறப்பாக ஓதி தமிழ் வளர்க்கின்றனர்.
இந்த வருட நிறைவுக்குள் குன்றகுடி அடிகளாரின் திருவருகையுடன் திருமுறை மாநாட்டை
நடத்த மலேசிய இந்து சங்கம் திட்டமிட்டுள்ளதையும் தலைவர் குறிப்பிட்டார்.
மலேசியாவைப் பொறுத்தமட்டில், சங்க நடவடிக்கைகளுக்கு, எல்லா சமய அமைப்புகளும்,
ஆலையங்களும் பொதுமக்களும் துணைநிற்கின்றனர்; இது இந்து பெருமக்களிடையே ஒற்றுமை
செழித்துள்ளதை குறிக்கிறது என்றும், திருமுறையை பாடப்பாட, மலேசிய இந்து சங்கம்
மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருவதை கண்கூடாக காண முடிகிறது என்றும் திருமுருகன்
திருவாக்கு திருபீட அதிபர் பாலயோகி சுவாமிகள் தமதுரையில் குறிப்பிட்டார்.
திருமுறை வளர்ச்சிக்கு துணை நின்ற இறை தொண்டர்கள் எண்மருக்கு, இவ்விழாவில் 'திருமாலையும்'
'திருபரிசும்' அளிக்கப்பட்டது.
10-ஆவது உலகப் பண்பாட்டு மாநாடு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் மலாயா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய 10-ஆவது
உலக பண்பாட்டு மாநாட்டு மிகக் கோலாகலமாக மலாயா பல்கலைக் கழகத்தில் கடந்த 20-7-2007-
தொடங்கியது.
உலக நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள், அரசியல் தலைவர்கள்,
உள்நாட்டு-வெளிநாட்டு பேராளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் திருமதி கமலா கணபதி
அவர்கள் திருவிளக்கு ஏற்ற, உள்-நாட்டு வாணிப-மற்றும் பயனீட்டாளர் நலத்துறையின்,
துணையமைச்சர், டத்தோ எஸ் வீரசிங்கம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
உலக தமிழ்ப் பண்பாட்டியக்கத் தலைவர் ப.கு. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்
தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ச. ராமசாசு, இலங்கை அமைச்சர்
பெ.சந்திரசேகரன், மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் டத்தோ ரபியா சலீம், இலங்கத் தமிழ்
பண்பட்டு இயக்க பொதுச் செயலாளர் து. கணேசலிங்கம், மலாயா பல்கலைக்கழக
இந்தியப்பிரிவுத் தலைவர் முனைவர் சு.குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெயர் வைப்பதில் தமிழர்களின் சீர்கேடுகள் - கருத்துப் பரிமாற்றம்.
'மார்க்கண்டேயன்' என்ற நாமத்தோடு உலக வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர், தொழில்
உலகில் தன்னை 'மார்க்' என கூறிக்கொண்டு, அப்படி அழைப்பதையே ஆங்கிலேயர்கள்
விரும்புகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார். உலகுக்கு பண்பாடுகளைக் கற்றுக்
கொடுத்த தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கலாமா?
இலங்கையைச் சேர்ந்த ஞா. பால சந்திரன், மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் புலம்
பெயர்வால் புலம் பெயரும் தமிழ்ப் பெயர்கள் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளை
சமர்ப்பிக்கும் போது, தமிழ் குழந்தைகள் பெயர்கள் தமிழ் ஒலியோடு இல்லை, எல்லாம்
கலவையாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பண்பு சத்தியம்,
பணிவு, உண்மை போன்ற உன்னத சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு அழகிய தமிழ்ப் பெயர்கள்
இருக்கின்றன. தமிழ்ப்பெயர்களின் ஒலியை மாற்றிக் கொண்டு, நம் மொழியை அழிக்க நாம் துணை
போக்க் கூடாது என்றும் கருத்துரைத்தனர்.
இம்மாநட்டில் உலகலாவிய நிலையில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகத்
தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, வாழ்வியல் பற்றிய கூறுகளை ஆய்வு செய்து கட்டுரைகள்
படைக்கப்பட்டன.
மலேசியாவைச் சேர்ந்த இணைப் பேராசிரியர்கள், முனைவர்கள், கவிஞர்கள், தமிழ்
ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை தமக்கே உரிய பாணியில் சிறப்பாக படைத்தனர்.
சிங்கப்பூர், தமிழ்நாடு, இலங்கை, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, கனடா, நார்வே
மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்தும் வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் மிகச்
சிறப்பான கட்டுரைகளை படைத்தனர்.
பண்பாட்டு கலைவிழா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் பாடலாசிரியர்கள்
இயற்றிய இசைப்பாடல்களும், நாட்டுப்புற நடனங்களும் இந்நிகழ்வுக்கு மெருகூட்டின.
உலகச் சித்தர் நெறி மாநாடு
ஆறரைக் கோடி தமிழ் மக்கள் வாழ்கின்ற தமிழ் நாட்டிலை நடத்த முடியாத ஒரு மாநாட்டை
மலேசிய மண்ணல் நடத்திக் காட்டியிருக்கும் உங்கள் அனைவருக்கும் உலகத்திலுள்ள 94
நாடுகளில் வாழுகின்ற தமிழர்களுக்கெல்லாம் ஒரே பல்கலைக்கழகமாக இருக்கும் தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மலேசிய மண்ணில் தொடங்கப்பட்ட அத்தனை மாநாடுகளும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன
மலேசியத் தமிழர்களின் தமிழுணர்வு வியப்பில் ஆழ்த்துகிறது
மலேசியத் தமிழர்களிடம் காணப்படும் தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் இலக்கிய தாகமும்
தமிழை வளர்க்கும் பாங்கும் பாராட்டக் கூடியது என்று 'லண்டன் சுடரொளி' இலக்கிய
இதழின் ஆசிரியர் ஐ.தி. சம்பந்தன் கூறுகிறார்.
கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வாழும் ஐ.தி. சம்பந்தன், அங்கேயே சட்டம்
படித்து வழக்குரைஞராக தொழில் புரிந்து வருகிறார். அண்மையில் மலேசியாவில் நடந்த உலக
சித்தர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியா வந்த அவர் மலேசியத் தமிழர்களின்
தமிழ் ஆர்வத்தை கண்டு வியந்து பாரட்டினார்.
லண்டனிலிருந்து வெளிவரும் 'சுடரொளி' இதழை உலகமெங்கும் வாழ்கின்ற மக்களிடம் தமிழ்
தேசிய வெளியீடாகக் கொண்டு வரவேண்டும். அதன் மூலம் உலகத் தமிழர்களிடத்தில் ஓர்
உறவுப்பாலத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். உலகலாவிய
நிலையில் இலக்கியப் போட்டிகளை நடத்திவந்துள்ள 'சுடரொளி' இதழ், மலேசிய மக்களுக்காக
மலேசியாவில் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தி, சிறந்த பரிசுகளை வழங்க வேண்டும் என்ற
தனதுஆர்வத்தையும் வெளியிட்டார்.
இந்த 'நிகழ்வுகள்' பகுதியில் அமைப்புகள், சங்கங்கள், வாசகர் வட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் போன்ற இலக்கிய நிகழ்வுகளின் விவரங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.