|  முகப்பு  |   தொடர்பு  |   ஆக்கம்  |
 

 

 

மணம் கமழும் இனிய தமிழை மலேசிய மண்ணில் சீரும் சிறப்புமாக வளர்த்து இன்று நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் படி உலா வரச்செய்த பெருமை தம் எழுத்தாளர்களையே சாரும்



மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம்
            உங்களை வரவேற்கிறது


 

சந்திரகாந்தம், ப.


பிறந்த தேதி: 28/2/1941
புனைபெயர்: சந்திரா, கலைத்தூதன், அஸ்வினி.
பணி: முன்னாள் சிரியர்; முன்னாள் பத்திரிகைத் துணையாசிரியர்; முன்னாள் வானொலி எழுத்தாளர், தயாரிப்பாளர்.

நூல்கள்: "அழுதால் உன்னைப் பெறலாமே" (நாவல், 1975); "டும் மஞ்சள் ஊஞ்சல்" (வரலாற்று நாவல், 1985); "ஜான் திவி முதல் சாமிவேலு வரை" (வரலாறு, 1988); "மலேசிய இந்தியர்களின் சமூக அரசியல் வாழ்க்கைப் போராட்டங்கள்" (கட்டுரை, 1995); ""அங்கும் இங்கும்" (சிறுகதைகள், 1997); "ப. சந்திரகாந்தம் வானொலி நாடகங்கள்" (தொகுப்பு, 1997); "சாதனைப் படிகளில் சாமிவேலு" (வரலாறு, 1999); "கூட்டுறவுக் காவலர்" (வரலாறு, 1999); "வலை" (சிறுகதைகள், 2002); "இருநூறு ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்" (வரலாறு, அச்சில்); "அமுத சுரபிகள்" (நாவல், அச்சில்).

1960கள் முதல் எழுதி வரும் முன்னணி எழுத்தாளர். 100க்கு மேற்பட்ட ச்¢றுகதைகள், 9 தொடர்கதைகள், 600க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். சிங்கப்பூர் வானொலியிலும் நாடகங்கள் எழுதியதுண்டு. தமிழ் நேசன் துணையாசிரியராகவும் பின்னர் ஞாயிறு பதிப்பின் துணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலாளராக இருந்ததுண்டு.

பரிசுகளும் விருதுகளும்: குவால லும்பூர் இலக்கியச் சிந்தனை அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1985); தமிழ் நேசன் குறுநாவல் போட்டியில் பரிசு (1989); மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம்; பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழாவில் தங்கப் பதக்கம்.
 

 


© 2006 • Malaysia Tamilwriters Network Management •
மலேசியத் தமிழர் வரலாறு - மலேசியத் தமிழ் இலக்கிய உலகம்    *  இவை உங்கள் விரல் நுனியில்   *   உலகப்பார்வையில்    *   லாப நோக்கமற்ற  மலேசியாவின் முதல் தமிழ் இணைய சேவை தளம்  *